சர்வதேச நீதிபதிகள் அரசமைப்புக்கு முரணானது : சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி

0
62

சர்வதேச நீதிபதிகள் இலங்கையின் உள்ளக விசாரணையில் ஈடுபடுத்துவதற்கு அரசமைப்பில் இடமில்லை என்று இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தும் பரிந்துரை முன்லைக்கப்பட்ட போதே தாம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தோம்.

இது தொடர்பான சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும். ஜனாதிபதியும், பிரதமரும் கூட வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் ஈடுபடுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments