சம்பந்தனைச் சந்தித்தார் ஜேர்மனி நாடாளுமன்றத் தலைவர் லம்மேர்ட்

0
26

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனி நாடாளுமன்றத் தலைவர் பேராசிரியர் கலாநிதி லம்மேர்ட்டுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமான சந்திப்பு நாடாளுமன்ற கட்டத் தொகுதியில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ செயலகத்திலேயே மேற்படி சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நல்லிணக்க முயற்சிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறுபான்மையின மக்களின் நலன்களை வென்றெடுப்பதற்கு அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு தொடரப்பட வேண்டியது அவசியம் என்று இந்தச் சந்திப்பின் போது இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஜேர்மனி எப்போதும் பக்கபலமாக இருக்கும் என்று இதன்போது ஜேர்மனி நாடாளுமன்றத் தலைவர் பேராசிரியர் கலாநிதி லம்மேர்ட் எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement