சமூகத்தைச் சீரழிக்கும் தொலைக்காட்சித் தொடருக்குத் தடை

0
368

சமூகத்தைச் சீரழிக்கும் தொலைக்காட்சித் தொடருக்குத் தடை.

சமூகத்தைச் சீரழிக்கும்

இப்போது சின்னத்திரையிலும் ஆபாசக் காட்சிகள் ஆரம்பித்துள்ளன. சொனி தொலைக்காட்சி பெஹ்ரிதார் பியா கி என்ற தொடரை கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒரு ஜமீன் குடும்பத்து கதையாகும்.

சமூகத்தைச் சீரழிக்கும்

தொடக்கத்தில் நன்றாக கலகலப்பாகப் போய்கொண்டிருந்து. ஆனால் கடந்த சில வாரங்களாக கதையில் சில தேவையற்ற காட்சிகளைச் சேர்த்தனர். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு, இன்னொரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு காதல் வருகிறது. சிறுவன் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக பெண் குடும்பத்து ஜமீன், காதலுக்கு உதவி செய்கிறது. ஒரு கட்டத்தில் ரகசியமாக திருமணமும் செய்து வைத்து விடுகிறது. இருவரும் இணைந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பிக்கிறார்கள்.

சமூகத்தைச் சீரழிக்கும்

இவ்வகையான கதையின் நகர்தலைப் பார்த்தவர்கள் பேஸ்புக், டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்கள்.உடனே சேனல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பியது. இதற்குப் பிறகும் எதிர்ப்பு வலுப்பெற்றதே தவிர குறையவில்லை.

சில தன்னார்வ அமைப்புகள் இந்த தொடருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த சொனி தொலைக்காட்சி நிர்வாகம் தொலைக்காட்சித் தொடரை நிறுத்த முடிவு செய்தனர். இதன் மூலம் சின்னத்திரை சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com