சமிஞ்ஞையை மீறிச்சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிச்சூடு

0
41
சமிஞ்ஞையைபுத்தளம் – மீஓய பிரதேசத்தில் சமிஞ்ஞையை மீறிச் சென்ற மணல் ஏற்றிய பாரவூர்தி மீது காவல்துறையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாரவூர்தியில் பயணம் செய்த இருவர் சிறு காயங்களுடன் புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக, புத்தளம் காவல்துறையின் விசேட படைபிரிவுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை அடுத்து சோதனைக்குச் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது காவல்துறை அலுவலர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.