சன்னி லியோனின் உச்ச சந்தோசம்!

0
371

ஷாருக்கானுடன் நடித்த மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல பொலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது

ஹிந்தி படவுலகில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. நீலப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்று என்னை பலரும் வெறுப்பாகவே பார்த்தனர்.

ஹிந்தி பட உலகில் அதிக நாட்கள் நீடிக்க முடியாது, இன்னும் 2 மாதங்கள்தான் இங்கு இருப்பார் அதன்பிறகு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர் நாட்டுக்கே திரும்பி விடுவார் என்றனர்.

பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே தயங்கினார்கள். இந்நிலையில் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நான் நடிப்பதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு சொல்லவில்லை. இதனால் மகிழ்ச்சியில் உள்ளேன்.

பெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன். பெரிய கதாநாயகர்கள் என்னை அவர்கள் பக்கம் நெருங்க விடமாட்டார்கள் என்று சொன்னவர்கள் கருத்தை இது பொய்யாக்கி இருக்கிறது.

இனிமேல் மற்ற கதாநாயகர்களும் என்னுடன் நடிக்க ஆட்சேபிக்க மாட்டார்கள். என்று அவர் கூறியுள்ளார்.

Comments

comments