சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது

0
61

வடமத்திய கடற்படை கட்டளை தலைமன்னார் கடற்படை கப்பல் கஜபா வீரர்களால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுத்பார் பிரதேச கடலில் நேற்று முன்தினம் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு, இரு தனியிலை வலை ,04 சுழியோடி முகமூடிகள் 03 சோடி சுழியோடி காலணிகள், மின்சார அல்லாத 8 டெட்டனேட்டர்கள், ஜெலநய்ட் 04 குச்சிகள் மற்றும் ஒரு ஜிபிஎஸ் இயந்திரம் ஆகியன இவர்களிடம் கைப்பற்றப்பட்டது.

குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.