சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதிரை மரங்களை பொலிஸார் கைப்பற்றினர்

0
31
சட்டவிரோதமான முறையில்

வாகரை பொலிஸ் பிரிவில் வெருகல் திக்கன காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதிரை மரங்கள் இன்று (06.02.2018) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.திஸானாயக்க தெரிவித்தார்.

வாகரை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கடத்தப்படுவதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இவ் முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெருகல் திக்கன காட்டுப்பகுதியில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கழிவு கடதாசி அட்டைகள் கொண்டு வருவது போல் கழிவு கடதாசி அட்டைகளால் மறைத்து கொண்டுவரப்பட்ட நிலையில் ஏழு அடி மதிக்கத்தக்க பதினொரு முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை ஏற்றி வந்த எல்ப்ரகபடி வாகனமும் வாகரை பொலிஸ் உத்தியோகத்தர்களான ஏ.விஜயதுங்க, நிமல் சாந்த, வை.தினேஸ், பன்டார, குமார ஆகியோர் அடங்கிய குழுவினர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.திஸானாயக்க மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமான முறையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com