ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாஸ தலைமையிலா!!!

0
2822
சஜித் பிரேமதாஸ

ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாஸ தலைமையிலா!!!

ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டக் குழுவின் பேச்சுவார்த்தை அலரிமாளிகையில்

அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்சமயம் அக்கட்சியின் உயர்மட்டக் குழுவின் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகிறது.

இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சியானது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான நல்லாட்சியில் தொடர்வதா? இல்லையா? எனவும், எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைமைப் பதவியை சஜித் பிரேமதாஸாவிடம் ஒப்படைப்பது பற்றியும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com