சகோதரனும் சகோதரியும் இரகசிய திருமணம் – களனியில் வினோத சம்பவம்

0
646
Want create site? Find Free WordPress Themes and plugins.

அண்ணன் மற்றும் தங்கை திருமணம் செய்துக் கொண்ட சம்பவமொன்று களனி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் சிறுவயதில் பிள்ளைகள் இல்லாத தம்பதியினருக்கு வளர்ப்பதற்காக அவரது பெற்றோர்களால் வழங்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது 21 வயது ஆகும்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் மூத்த சகோதரன் அவர் வளர்க்கப்பட்ட வீட்டிற்கு அவரது தங்கையை பார்ப்பதற்காக வந்துள்ளார். காலபோக்கில், தொடர்ந்து அவரின் தங்கையை பார்க்க அவர் வந்துள்ளதாக தெரிகிறது.

பெண்ணின் சொந்த சகோதரன் என்ற படியால் வளர்ப்பு பெற்றோர் அதற்கு அனுமதியும் வழங்கியுள்ளனர். பின்னர் இருவரும் வௌியில் பயணங்கள் சென்று வர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஒருநாள் வௌியில் சென்ற அவர்களின் வளர்ப்பு மகள் திரும்பி வராத நிலையில் வளர்ப்பு பெற்றோர் இது தொடர்பில் களனி பொலிஸில் கடந்த மே மாதம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த களனி பொலிஸார் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையத்துக்கும் இது தொடர்பில் அறிவித்ததை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கேகாலை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில், குறித்த பெண் அவரது சொந்த சகோதரனை திருமணம் செய்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இலங்கை சட்டத்தின் படி இவ்வாறான திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் குறித்த அண்ணன் மற்றும தங்கை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனையின் படி களனி பிரிவால் மேற்கொள்ளப்படவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments