கோப்பாய் வாள்வெட்டு தொடர்பில் மேலுமொருவர் கைது

0
27

கோப்பாய்-கோண்டாவில் பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலின் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தீவிரவாதஒழிப்பு விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com