கோத்தாபய ராஜபக்ச உருவாக்கும் புதிய சமூக அமைப்பு

0
50

கோத்தாபய ராஜபக்ச ‘எலிய’ பெயரைக்கொண்ட ஒரு புதிய சிவில் சமூக அமைப்பினை உருவாக்கவுள்ளார். சிங்கள வார்த்தையான எலிய எனும் சொல்லுக்கு தமிழில் வெளிச்சம் என்பது பொருள்.கோத்தாபய ராஜபக்ச

வருகின்ற 6ம் திகதி பொரலஸ்கமுவில் உள்ள கோல்டன் ரோஸ் விடுதியில் இவ் அமைப்பின் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பு எனும் போக்குடன் நாட்டினை பல துண்டுகளாக பிரிக்கும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கூட்டு எதிரணியினர், நெருங்கிய வட்டாரங்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com