கோட்டாவின் மனு நிராகரிப்பு

0
73
கோட்டா

சர்ச்சைக்குறிய அவன்கார்ட் வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‘கோட்டா’பய ராஜபக்‌ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

தான் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரால், ஆணைக்குழுவிடம் இருந்து எழுத்து மூல கோரிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லை என்று ‘கோட்டா’பய ராஜபக்‌ஷ, தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்வது சட்ட விரோதமானது என்றும், அதன் காரணமாக தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரியும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளதாகவும், அந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்க கோரியும் மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவால் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com