கொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் – அனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம்

0
42

கொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் – அனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம்

hambantota port

கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களை கண்காணிக்கும் 4 டக் ரக படகுகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்படும் பட்சத்தில் கொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

மஹாரகமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அந்த சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி இதனை குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகத்தை விற்பனை செய்து தற்போது படகுகளையும் அனுப்புகின்றனர்.

அடுத்த வாரமளவில் படகுகள் அங்கு அனுப்பப்படும் என கூறுகின்றனர்.

இதனால் கொழும்பு துறைமுகம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement