கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய போட்டி

0
80

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய போட்டி

கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.கொழும்பு

கண்டி – பல்லேகல மைதானத்தில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது இலங்கை அணி ரசிகர்கள் மைதானத்துக்குள் போத்தல்களை எறிந்து குழப்பம் விளைவித்தனர்.கொழும்பு

இதனால், போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டு ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு வழங்க சிறிலங்கா கிரிக்கட்டின் பாதுகாப்பு பிரிவு தீர்மானத்துள்ளது.கொழும்பு

இதற்கமைய, கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளின் போது, போத்தல்கள், கொடி கம்புகள், கூரிய ஆயுதங்கள், தீப்பெட்டி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை எடுத்துவர ரசிகர்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments