கொழும்பில் அடை மழை நீரில் மூழ்கிய வீதிகள்

0
86

கொழும்பில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் அடை மழை காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிய வறட்சி வெசாக் தினத்தின் பின்னர் முடிவுக்கு வந்தது. வறண்டு போய்க்கிடந்த நிலங்களுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர்தான் குளிர்காய வழிப்பிறந்தது. ஆனால், மழை பெய்ய ஆரம்பித்து ஒருசில நாட்களிலேயே வெள்ளப்பெருக்கெடுக்கும் அபாயம் தற்போது தோன்றியுள்ளது.

கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பெய்த கடும் மழையால் கொழும்பின் புறநகர் பகுதிகளின் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, கிராண்பாஸ், கிருலபனை போன்ற வீதிகளில் போக்குவரத்து இடம்பெற முடியாத வகையில், மழை கொட்டித் தீர்த்திருந்தது.

கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப் பெருக்கெடுத்தது. இந்நிலையில் தொடர் மழை பெய்யும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கெடுக்கும் அபாய நிலையே காணப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com