கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது : இடதுசாரி நிலையம்

0
346
Want create site? Find Free WordPress Themes and plugins.

மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என இடதுசாரி நிலையம் குற்றம் சாட்டியுள்ளது.

குற்றமிழைத்தவர்களைவிட குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இடதுசாரி நிலையம் வலியுறுத்தியுள்ளது.

“வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே உறுதியானது. அதற்கு முன்னர் அது ஒரு விபத்து என்றே கூறப்பட்டது.

இது தொடர்பில் விசாரணை செய்ய அப்போதைய மஹிந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

மகஸின் சிறைச்சாலையில் பெயர் குறிப்பிட்டு 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அது தொடர்பில் வழக்கு விசாரிக்கப்பட்டதா?

ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே? கோத்தபாய ராஜபக்ஷவின் தேவைப்பாட்டுக்கு அமையவே படுகொலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பில் எவரும் பேசவில்லை.

ஒரு குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செய்த குற்றங்களை மூடிமறைக்க முயன்றனர்.

எனினும், அது தொடர்பிலேயே முதலில் விசாரணை செய்ய வேண்டும். அரசின் வேகம் போதவில்லை. அது தொடர்பில் எமக்குப் பிரச்சினை இருக்கின்றது.

அதுபோல் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்களுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல எனவும், முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்டவர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் கோத்தபாய கூறுகின்றார். ஆகவே, தான் குற்றவாளி என்பதை அவர் நிராகரிக்கவில்லை.

கடந்த காலத்தில் ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு தொடர்பில் கம்பஹா நீதிமன்றில் முன்னாள் பிரிகேடியர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “இது எனது தனிப்பட்ட விருப்பத்தில் நடைபெற்ற விடயமல்ல. எனது தேவைக்காக மேற்கொண்ட விடயமல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது நானல்ல. எனக்குக் கிடைத்த உத்தரவுக்கு அமைய நான் செயற்பட்டேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments