கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் இன்று கொழும்பு வருகிறார்

0
11

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் எதிர்வரும் 7ஆம் திகதிவரை இங்கு தங்கியிருக்கவுள்ளார்.

கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ்
கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ்

இதன்போது வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு அவுஸ்ரேலியாவின் நிதியுதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களையும் பார்வையிடவுள்ளார். அத்துடன், பல்வேறு நிகழ்வுகளிலும் இவர் பங்கேற்றவுள்ளதாக அஸ்திரேலிய தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.

அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments