கொத்மலை பகுதியில் இராணுவ வண்டி விபத்து – 10 காயம்

0
23

கொத்மலை பகுதியில் இராணுவ வண்டி விபத்து – 10 காயம்

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட பலகொல்ல பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானது.

நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 10 பேரில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கண்டி பகுதியிலிருந்து பயிற்சிக்காக தியத்தலாவ பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இடது பக்கம் உள்ள பாரிய வளைவில் திருப்பிய பின்னர் மீண்டும் திருப்புவதற்கு முடியாமல் போனமையால் டரக் வண்டி மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com