கொங்கோவில் தீவிரவாதிகள் தாக்குதல் – 11 பேர் பலி

0
24
Want create site? Find Free WordPress Themes and plugins.

கொங்கோ நாட்டின் கிழக்கு நகரான பெனியில் உள்ள சிறையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 900 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொங்கோ நாட்டின் உத்தியோகபூரிவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 8 பேர் சிறை காவலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தாக்குதலைத் தொடர்ந்து பெனி மற்றும் புடெம்போ பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிஸார் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக கின்ஷாசா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் என கொங்கோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மே மாதம் கிறிஸ்துவ செக்ட் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்துவ தலைவர் தப்ப வைக்கப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments