51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது

0
35

51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். லீக் ஆட்டமொன்றில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், பில்லிங்ஸ் 55 ஓட்டங்களையும், அன்ருசன் 39 ஓட்டங்களையும், ஐயெர் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், அரோன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக்கொண்டார்.

இதனையடுத்து 189 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 31 ஓட்டங்களுக்குள் வோஹ்ரா, சாகா, ஆம்லா ஆகிய முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க பஞ்சாப் அணிக்கு கடினமாக அமைந்தது.

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், பட்டேல் 44 ஓட்டங்களையும், மோர்கன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், நதீம் மற்றும் சும்மிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றிக்கொண்டனர்.

51 ஓட்டங்கள் வித்தியாசத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments