பிரித்தானிய இளவரசியின் நிர்வாண படங்களை வெளியிட்டவர் சிக்கலில்

0
2809

kate middletonபிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி, இளவரசி கேட் மிடில்டன்  மேலாடை இல்லாத புகைப்படத்தை  படத்தை வெளியிட்ட ‘க்ளோசர்’ பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் உரிமையாளருக்கு நீதிபதி ,  மிக அதிகபட்ச அபராதமான 45,000 யூரோக்கள் அபராதமாக விதித்தார். இளவரசிக்கும், அவரது கணவருக்கும் தலா 50 ஆயிரம் யூரோ இழப்பீடு தரவேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு இத்தம்பதியர் பிரான்சில் உள்ள புரோவான்ஸ் என்ற இடத்தில் விடுமுறையைக் கழித்தபோது எடுக்கப்பட்ட இப்படங்கள் அவர்களது அந்தரங்கத்தில் செய்யப்பட்ட தலையீடு என்று நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டது.

சூரியக் குளியல் எடுக்கும் அந்தப் படங்கள், நீண்ட தொலைவில் இருந்து எடுக்கும் லென்ஸ் உதவியால் எடுக்கப்பட்டது, விரட்டி  விரட்டி   படமெடுக்கப்பட்டதால் தமது தாய் டயானாவுக்கு நேர்ந்த அனுபவம் இருப்பதால், அந்தரங்க அத்துமீறல் மிகுந்த வலியைத் தருவதாக முடிக்குரிய இளவரசர் வில்லியம் தெரிவித்திருந்தார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com