கேட்ச்சுகளை தவறவிட்டால் தோல்வி அடைந்தோம் – மெத்தியூஸ் உருக்கம்

0
67
Want create site? Find Free WordPress Themes and plugins.

கேட்ச்சுகளை தவறவிட்டால் தோல்வி அடைந்தோம் மெத்தியூஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறமுடியும் என்ற நிலையில் களம் இறங்கிய இலங்கை தோல்வி அடைந்து வெளியேறியது.

இதுகுறித்து அந்த அணி தலைவர் மேத்யூஸ் கூறுகையில், நாங்கள் போதுமான ஓட்டங்களைச் சேர்க்கவில்லை. இருந்தாலும் நெருக்கடி கொடுப்போம் என்பதை அறிந்து இருந்தோம்.

பந்துவீச்சாளர்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்தனர். ஆனால், கேட்ச்சுகளை தவறவிட்டால் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அனுபவமில்லாத அணியை வைத்து கடுமையாக போராடினோம். எங்களது அணி வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கார்டிப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களையும், மெத்தியூஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஜுனைட் கான் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொஹமட் அமிர் மற்றும் ஃபாஹிம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

237 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்து அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் அஹ்மட் 61 ஓட்டங்களையும், பகார் ஸமான் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அஹ்மட் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேட்ச்சுகளை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments