கொழும்பில் சேரும் குப்பைகளில் புத்தளம் அறுவைக்காடு பகுதிக்கு? : அமைச்சரவையில் ரிஸாட் கடும் எதிர்ப்பு

0
22

கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்துக்கு கொண்டுச்செல்வதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஸாட் பதியூதின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதனால், இவ்விகாரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றுத. இதன்போது,கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொண்டுசெல்வதற்கு தனதுஅமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமைச்சரவை எந்த விதமான எதிர்பையும் காட்டாமல் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ரிஸாட், வடமாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒருலட்சம் முஸ்லிம்களை தாங்கிக்கொண்டு தமது வளங்களை எல்லாம் பறிகொடுத்த பின்னர் துன்பத்திலே அந்தமக்கள் வாழ்கின்றனர். இதுவரையில் அவர்களுக்குஎந்த இழப்பீடுகளும், நஷ்டஈடுகளும்வழங்கப்படவில்லை.

சீமெந்து தொழிற் சாலையை அங்கு நிறுவி புத்தளத்தை மாசுபடுத்தி உள்ளீர்கள். அனல்மின் நிலையத்தை அரசு கொண்டு வந்துஅ ந்த மக்களைக ஷ்டத்தில் போட்டுள்ளது` என்றார்.

இதன்போது குறுக்கீடுசெய்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அரசு அபிவிருத்திதானே செய்துள்ளதுகுறை சொல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

`அபிவிருத்தி என்றால் இங்கையா கொண்டு வரவேண்டும் வேறு எங்கயாவது கொண்டு சென்றிருக்கலாமே.
சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்க முற்பட்டபோது எதிர்ப்புக்களால்தானே கைவிடப்பட்டது. புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்கும்போது தொழில் வாய்ப்பில் 50 சதவிகிதம்தருவதாககூறினீர்களே, நடந்ததா?

1989ஆம் ஆண்டிலிருந்து இந்தமக்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. தேசிய கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து ஏமாந்துபோய் உள்ளனர். அரசியல் அனாதைகளாக இருக்கும் அந்தமக்களை பார்ப்பதற்கோ,
கேட்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் நீங்களும் துன்பப்படுத்துகிறீர்கள். இந்த விடயத்தில் நான் கடும் எதிர்ப்பைதெரிவிக்கின்றேன். விட்டுக்கொடுக்கமாட்டேன். பலவந்தமாக திணிக்க முடியாது“ என்று அமைச்சர் ரிஸாட் குறிப்பிட்டார். அமைச்சர் கபீர் ஹாசீமும் இதற்கு இந்தக் கருத்தை ஆதரித்தார்.

கொழும்பில் சேரும்

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

அமைச்சர் ரிஷாட் இதற்கு எதிர்ப்பு என்று எழுதிக்கொள்ளுங்கள் என்று அமைச்சரவை செயலாளரி்ம் கூறியதோடு அமைச்சர் சம்பிக்க இந்த விடயங்களை புத்தளமாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டத்தில் விளக்கி மக்களின் ஒத்துழைப்பை பெற முடியும் என்று தெரிவித்தார்.

ரிஷாட் – மாவட்டஅபிவிருத்திகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள்அநேகர்ஆனமடுவ, வென்னபுவதொகுதிகளிலிருந்து கலந்துகொள்பவர்கள், இவர்கள் இதுசரி என்று தீர்மானம் எடுத்தால் என்ன நடக்கும்.

எனவே, இந்தவிடயத்தில் நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments