மீண்டும் ஐ.தே.கவில் இணைகிறார் கெஹெலிய

0
30

கெஹெலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல, எதிர்வரும் 12ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கவுள்ள ஐதேகவின் உள்ளூராட்சித் தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

2001-2004 காலப்பகுதியில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல, பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சு பதவியைப் பெற்றார்.

அவர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com