கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – சந்தேகநபர் வீட்டை கொளுத்திய மக்கள்

0
21

இறக்குவானை, கொஹொம்பகந்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

இற்க்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் கோபமுற்ற பிரதேசவாசிகள் சந்தேகநபரின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

சந்தேகநபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments