கூட்டு எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் 26 பேர் கைது – பட இணைப்பு

0
26

கூட்டு எதிரணியினரால்இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனம் ஒன்றிடமும், மத்தளை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனம் ஒன்றிடமும் குத்தகை அடிப்படையில் கையளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாந்தோட்டை நகரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் செய்து கலைத்துள்ளனர்.

அம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதர் அலுவலக வீதியில் போடப்பட்டிருந்த போலீஸ் வீதித் தடைகளை அகற்றி முன்னேறிச் சென்ற வேளை அவர்களை கலைப்பதற்கு போலீஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகம் செய்ததாக உள்ளுர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போது அங்கு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் போது 3 போலீஸார் காயமுற்றனர். போலிஸாரால் கலகம் விளைவிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பேர் 26 வரை கைது செய்யப்பட்டுள்ளனர்;

அம்பாந்தோட்டை நகரில் கூட்டு எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ உட்பட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டு எதிரணியினரால் கூட்டு எதிரணியினரால் கூட்டு எதிரணியினரால் கூட்டு எதிரணியினரால் கூட்டு எதிரணியினரால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments