குஜராத் அணியை வீழ்த்தி புனே பதிலடி

0
29

குஜராத் அணியை வீழ்த்தி புனே பதிலடிக்கொடுத்துள்ளது.

10 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றை லீக் ஆட்டமொன்றில் புனே மற்றும் குஜராத் அணிகள் மோதின.

புனேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 161 ஓட்டங்களைப் பெற்று ஆல்அவுட் ஆனது. துடுப்பாட்டத்தில் மெக்கல்லம் 27 பந்துகளில் 45ஓட்டங்களையும், இஷான் கிஷன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இம்ரான் தாகீர், ஜெய்தேவ் உனன்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

162 என்ற ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனே அணி ஸ்டோக்ஸின் சதத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தே புனே அணி வெற்றிபெற்றது. பென் ஸ்டோக்ஸ் 63 பந்தில் 103 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிச்செய்தார். பசலி தம்பி, சங்வான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

புனே அணி பெற்ற 6ஆவது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே குஜராத்திடம் தோற்று இருந்தது. அதற்கு இந்த ஆட்டத்தில் வென்று புனே அணி பதிலடி கொடுத்தது.

இவெற்றி குறித்து புனே அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:

எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆனால், டோனியும், ஸ்டோக்சும் நிலைத்து நின்று ஆடி அணியை தலைநிமிர வைத்தனர். குறிப்பாக ஸ்டோக்சின் அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. சிறிய மைதானமாக இருந்ததால் அதை ஸ்டோக்ஸ் சரியாக பயன்படுத்தி சிக்சர்கள் அடித்தார்.

குஜராத் அணியை வீழ்த்தி

குஜராத் அணியை 161 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது தான் சிறப்பானது. இதற்காக பந்து வீச்சாளர்களை பாராட்டுகிறேன். எங்கள் அணியில் உள்ள ஸ்டோக்ஸ் மிக சிறந்த வீரர். அவரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments