கீத் நொயார் வழக்கு : ஆறு சந்தேக நபர்களுக்கு பிணை

0
73

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உள்ளிட்ட 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தி நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியரான கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தலா 10 இலட்சம் ரூபாபடி சந்தேக நபர்கள் 6 பேரையும் பிணையில் செல்ல நீதவான் லொச்சனா அபேவிக்ரம அனுமதியளித்ததோடு இந்த வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் அறிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments