கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது

0
152

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.
இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தகுதியிழந்தவராக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

கீதா குமாரசிங்க
கீதா குமாரசிங்க

அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்துக்கு அமைய, இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது. கீதா குமாரசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என்று அறிவிக்கக் கோரி, நான்கு பேர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தனர்.
இந்நிலையில், கீதா குமாரசிங்க சுவிற்சர்லாந்தில் இன்னமும் குடியுரிமையைக் கொண்டிருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா தெரிவித்திருந்தார்.

கீதா குமாரசிங்கவின்

அரசியலமைப்பின் 91(1) பிரிவின் கீழ் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பெறுவதற்கோ, நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிப்பதற்கோ தகுதியற்றவர் என்று பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஜனக் டி சில்வா, நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது போன்று மேலும் சிலருக்கு இந்நிலை விரைவில் ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments