கிழக்கை தமிழர்கள் காப்பாற்ற வேண்டும்

0
38

தமிழர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்லடியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் அரசியலில் விழிப்படைய வேண்டும். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு சிங்கள மக்களினதும், சிங்கள மதத் தலைவர்களினதும் ஆதரவு வெளிப்படையாகவே இருக்கின்றது.
நல்ல ஒரு தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள மக்களும், சிங்கள மதத் தலைவர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களினது பிரதிநிதித்துவம் முழுமையானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments