கிழக்கில் 259 கலைப்பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

0
14
Want create site? Find Free WordPress Themes and plugins.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 259 கலைப்பட்டதாரிகளுக்கு சிங்களம், தமிழ் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் நேற்று புதன்கிழமை (14) வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இதற்கு முன்னர் போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையில் வரலாறு படத்தில் தோற்றி சித்தியடைந்தும் வெற்றிடங்கள் இன்மையால் நியமனங்கள் வழங்கப்படாதிருந் தவர்கள், மற்றும் குறைந்த வெட்டுப்புள்ளிகளைப் பெற்றவர்கள் ஆகியோருக்கான வெட்டுப்புள்ளிகளைக் குறைத்து முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன,

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக கிழக்கில் 1,700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 890 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாகாணசபை தவிசாளர் சந்திரதாஸ கலபதி, பிரதம செயலாளர் சரத் அபய குணவர்த்தன உட்பட பல மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் நியமனம் பெறும் பட்டதாரிகளின் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments