கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை

0
31

ரியல் மாட்ரிட் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அவர் உறுதி செய்துள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் ‘லா லிகா’ தொடரில் இடம்பெறும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் சிறந்த ஆட்டத்தினால், இந்த சீசனில் ரியல் மாட்ரிட் ‘லா லிகா’ மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் கைபற்றியது.

கிறிஸ்டியானோ

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான். எனினும், வாடகைத் தாய் மூலம் மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். அதன்படி தற்போது வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு ரொனால்டோ தந்தையாகியுள்ளார்.

இரட்டை குழந்தை பிறந்ததை கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். அவருக்கு போர்ச்சுக்கல் கால்பந்து பெடரேசன் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனல்டோ தனது பேஸ்புக் பக்கத்தில் போர்ச்சுக்கீசிய மொழியில் கூறியிருப்பதாவது:-

‘‘என்னுடைய இரட்டை குழந்தைகள் பிறந்த செய்தி வந்தபோதும் கூட, என்னுடைய உடல் மற்றும் ஆன்மா முழுவதும் தேசிய அணியில் விளையாடுவது குறித்துதான் இருந்தது. என்னுடைய இரட்டை குழந்தைகளை பார்க்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை பிறந்ததை கொண்டாடுவதற்காக ரொனால்டோவை, கான்பெடரேசன் கோப்பை தொடரில் இருந்து முன்கூட்டியே விடுவித்துள்ளார் கால்பந்து சங்க தலைவர். இதனால், கான்பெடரேசன் கோப்பை தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் ரொனால்டோ விளையாட மாட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com