காற்று வெளியிடை கொரிய சீரியலின் காப்பியா? 

0
192

காற்று வெளியிடை கொரிய சீரியலின் காப்பியா?

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் நடிகர் கார்த்தி அதிதி ராவ் ஹைதரி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த காற்று வெளியிடை படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் தெரிவித்துள்ள சூழலில் கொரிய நாட்டு சீரியலான “டிசென்டன்ட்ஸ் ஆப் த சன்’ என்பதின் காப்பியடித்து களத்தை மணிரத்தனம் உருவாக்கியுள்ளார் என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுகள் பரவியுள்ளன.காற்று வெளியிடை கொரிய சீரியலின் காப்பியா? 
மணிரத்னம் இயக்கிய ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு ஒரு விமர்சனம் வந்திருக்குமா என்று சொல்லுமளவிற்கு இந்தப் படத்திற்கு பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். மணிரத்னத்தின் ரசிகர்கள் இது மற்றுமொரு “மணி ஸ்டைல்’ படம் என்றும்,  மற்றவர்கள் படத்தில் எதிர்பார்த்த எதுவும் இல்லை என்றும் சொல்லி வருகிறார்கள்.
இந்தப் படம் கொரியன் சீரியலான “டிசென்டன்ட்ஸ் ஆப் த சன்’ என்பதின் காப்பி என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தத் தொடரின் நாயகன் இராணுவத்தில் இருப்பவர்,  நாயகி ஒரு டாக்டர்  இருவருக்கும் இடையிலான காதல் தான் இந்தத் தொடர். இத்தொடருக்கும் “காற்று வெளியிடை’ படத்திற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது எனக் கருத்துக்கள் கோடம்பாக்கத்தில் உலாவி வருகின்றன.
அதேசமயம் 1971ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற போரில் போர்க் கைதியாக பாகிஸ்தானிடம் சிறைபட்டு தப்பி வந்த டி.கே. பருல்கர் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம்தான் “காற்று வெளியிடை’  படம்  என்றும் சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
Advertisement