கார்குண்டு தாக்குதல் நிகழ்த்திய 31 பேருக்கு மரண தண்டனை

0
23

எகிப்து நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மூத்த அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஹிஷாம் பராகத் என்பவரின் கார் மீது வெடிகுண்டுகள் நிறைந்த காரை மோதி வெடிக்கவிட்டு அவர் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் தொடர்பாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் ஹமாஸ் தீவிரவாத குழுவைச் சார்ந்த பல பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலில் தொடர்புடைய 31 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

எகிப்து நாட்டின் சட்டத்தின்படி, அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு இந்த தண்டனை விவரம் அனுப்பப்பட்டது.  இந்த தீர்ப்பை தலைமை முப்தி உறுதி செய்யும் பட்சத்தில் 31 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments