காய்ச்சல் அதிகமாயின் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுங்கள்

0
54

காய்ச்சலிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு வைத்தியரின் ஆலோசனையின் அடிப்படையில் பரிசிற்றமோல்ட் குறிப்பிட்ட குளிசையை தவிர வேறெந்த மருந்து வகையையும் பயன்படுத்தகூடாது.காய்ச்சல் அதிகமாயின்

காய்ச்சல் ஏற்பட்ட மூன்று நாட்களுக்கு மேற்படாது (அதாவது 48 மணித்தியாலங்களில் ) வைத்தியரின் ஆலோசனையின் அடிப்படையில் அவசியம் முழுமையான ரத்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை தற்பொழுது ஏனைய வைத்தியசாலைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் IDH காய்ச்சல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்திய சாலை, களுபோவில தேசிய வைத்திய சாலை , றாகம தேசிய வைத்தியசாலை, றிச்வே சிறுவர் வைத்தியசாலை, பாணந்துறை வைத்தியசாலை உள்ளிட்ட வைத்திய சாலைகளில் டெங்கு நோயிற்கான சிகிச்சை தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.

இதனால் காய்ச்சல் ஏற்பட்டவுடன் IDH வைத்தியசாலைக்கு மாத்திரம் செல்லாது அருகாமையிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com