காந்தி படம் கொண்ட செருப்பு விற்பனை; மீண்டும் சர்ச்சையில் சிக்கியது அமேசான்

0
66

amazon

இந்திய தேசிய கொடிகளின் படங்களை கொண்ட கால் மிதி விரிப்புகளை விற்பனை செய்ததற்காக மின் வணிக பெரு நிறுவனமான அமேசான் சில தினங்களுக்குமுன் மன்னிப்பு கோரியிருந்த நிலையில், இந்திய நாட்டின் நிறுவனத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை கொண்ட செருப்புகளை விற்பனைக்கு வைத்ததன் மூலம் புதிய சர்ச்சையில் அந்நிறுவனம் சிக்கியுள்ளது.

அமேசானின் அமெரிக்க பிரிவு இணைய தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த செருப்புகளின் புகைப்படத்தை ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பதிவிட்டனர்.

எச்சரித்த சுஷ்மா ஸ்வராஜ்; பணிந்தது அமேசான் நிறுவனம்
இந்த செருப்பானது தொழில் சார்ந்த முறையில் அச்சிடப்பட்டதாகவும் மற்றும் பார்ப்பதற்கு அழகாகவும், அனைவரையும் புன்னகைக்க வைக்கும் என்றும் இதுகுறித்து இணையதளத்தில் வர்ணிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் அமேசானின் கனடா பிரிவு இணைய தளத்தில் இந்திய தேசிய கொடிகளின் படங்களை கொண்ட கால் மிதி விரிப்புகளை விற்பனைக்காக வைத்ததற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், அந்நிறுவனம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

நன்றி BBC

Comments

comments