“காதல் ரோஜாவே..’ பாடினாலும் அமைச்சர் கனவு பலிக்காது : திலகர் எம்.பி.

0
23
Want create site? Find Free WordPress Themes and plugins.

மே தினத்தன்று சில அமைச்சர்களை அழைத்து வந்து “காதல் ரோஜாவே…’பாட்டு பாடியும் அடுத்த அமைச்சரவையில் தங்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கும் என்றும் அன்று கைதட்டு வாங்கிக் கொண்டவர்கள் இன்று தோட்டம் தோட்டமாகச் சென்று கைதட்டிக் கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள் அது ஏன் தெரியுமா? தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைத்த மேடையின் ஓரத்தில் தங்களுக்கும் இடம் ஒதுக்கியமைக்காக என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“காதல் ரோஜாவே…’ பாட்டுபாடி அமைச்சுப்பதவி பெறலாம் என கனவில் இருந்தார்கள் இன்று கனவு கலைந்து கவலையுடன் நிற்கிறார்கள். காதல் ரோஜாவே… பாடினாலும் அமைச்சர் பதவி கனவு பலிக்காது என்கின்ற நிலையில் இந்தியா வழங்கப்போகும் பத்தாயிரம் வீடுகளை தாங்களே அமைக்கப்போவதாகவும் கூறித்திருக்கின்றனர்.

அவர்கள், அமைச்சுப்பதவி வகித்த காலத்தில்தான் முதன் முறையாக இந்திய அரசு நான்காயிரம் வீடுகளை மலையகத்துக்கு வழங்கியது. அது வழங்கப்பட்டு நான்கு வருடகாலமாக நான்காயிரம் வீடுகளில் நான்கு வீடுகளுக்கு கூட ஒரு செங்கலை நாட்ட முடியாத ஆளுமையற்ற அமைச்சர்களாகவே இருந்தார்கள்.
மலைநாட்டு புதிய கிராமங்களை அமைக்கும் பொறுப்பினை அமைச்சர் பொறுப்பேற்ற பின்னரே இந்திய வீடமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதனடிப்படையிலேயே டன்சின், டயகம, பொகவான ஆகிய இடங்களில் வீடமைப்புத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 3ஆம் திகதி கொத்மலை ஹெலபொடை தோட்டத்தில் 100 வீடுகளுக்கான ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments