எங்கள் உறவுகள் எங்கே? – திருமலையில் 10வது நாளாக நீடிக்கும் போராட்டம்

0
55

காணாமல் போனோரின் உறவினர்களினால் திருகோணமலையில் நடத்தப்பட்டு வரும், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10வது நாளாகவும் நீடிக்கின்றது.

காணாமல் போனோரின்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரி கடந்த ஐந்தாம் திகதி, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டம் பல தடைகளையும் தாண்டி இன்று 10வது நாளாகவும் நீடிக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப உறுப்பினர்கள் என பலர்  ஒண்றிணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments