காட்டு வாசியில் பிடித்த சனி

0
130

காட்டு வாசியில் பிடித்த சனி

Sayesha-Saigal

வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  சாயெஷா சைகல்.

வனமகன் திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இருந்தார் சாயெஷா.

அவரின் திறமையை கண்ட இயக்குனர்கள் சிலர் சில திரைப்படங்களில் சாயெஷா சைகல் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

Sayesha-Saigal

இதற்கமைய கார்த்தியுடன் கருப்பு ராஜா வெள்ளை ராஜா திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தம்  செய்யப்பட்ட நிலையில், அந்த திரைப்படத்தின் பட பிடிப்புகள் தொடங்குவதாக இல்லை.

இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜூங்கா திரைப்படத்தில் நடித்து வரும் சாயெஷாவுக்கு போட்டியாக மேயாத மான் திரைப்படத்தின் பிரியா பவானி சங்கர் களமிறங்க போவதாக தெரிவிக்கப்பட்டது.

Sayesha-Saigal

அதாவது ஜூங்கா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் இவரும் ஒருவராக இறுக்கப் போகிறார்.

இந்த நிலையில் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயெஷா சைகல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sayesha-Saigal

இந்த திரைப்படமாவது சாயெஷாவுக்கு தமிழ் சினிமாவில் இடம்பிடிக்க உதவுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com