கவுதம் மேனன் படத்தில் காயத்ரி முக்கிய கதாபாத்திரத்தில்

0
61

பெங்ளூரை சேர்ந்த தமிழ் பெண் காயத்ரி. ‘ஏன் இப்படி மயக்கினாய்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்  விஜய் சேதுபதியுடன் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து அவர் நடித்துள்ள `புரியாத புதிர்’ திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், காயத்ரி `உலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கவுதம்மேனன் தயாரிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஷ்ணு விஷால் – தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் அவர்களுடன் காயத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் மேனன் படத்தில்

கவுதம் மேனின் உதவி இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்க உள்ள இப்படத்தை, கவுதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments