கவர்ச்சியா! அபச்சாரம் அபச்சாரம் சொன்ன நடிகை

0
509

கவர்ச்சியா! அபச்சாரம் அபச்சாரம் சொன்ன நடிகை

கவர்ச்சியா

மேயாத மான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் உள்ளட்ட பலர் மேயாத மான் திரைப்படத்திற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

தொலைகாட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற பிரியா பவானி சங்கர் சினிமாவில் மேயாத மான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

கவர்ச்சியா

மேயாத மான் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் அலட்டலில்லாத நடிப்பு அனைவரையும் ஈர்த்த நிலையில், அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதியின் ஜூங்கா திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கவர்ச்சியா

இது குறித்து பிரியா பவானி சங்கர் கூறும்போது, “சினிமாவில் எனது திறமைக்கு ஏற்ற வேடங்களில் நடிப்பேன். கவர்ச்சியான வேடங்களில் கண்டிப்பாக நடிக்கமாட்டேன். பெண்களை இழிவுபடுத்தாத கதைகளில் மட்டும் தான் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com