கள்ள நோட்டு அச்சிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர் விளக்கமறியலில்

0
79

கள்ள நோட்டு அச்சிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர் விளக்கமறியலில்.

கள்ள நோட்டு

யாழ்.அரியாலை நெளுக்குளம் பகுதியில் கள்ள நோட்டு அச்சிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கணவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மனைவியை கடுமையான எச்சரிக்கையுடனான பிணையில் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கள்ள நோட்டு

24வயதுடைய கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் கள்ளநோட்டு அச்சிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (06.11) கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும், 2 பிறின்டர் மற்றும் ஸ்கானர் உட்பட மடிக்கணணி, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் இன்று (07.11) யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இருவரையும் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய போது, கணவரான இ.லபீசனை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்ததுடன், மனைவியை 60 ஆயிரம் ரூபா பிணையில் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய நிபந்தனைகளுடன் செல்ல யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com