கயந்த கருணாதிலக கிராமிய அரசாங்க கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி

0
62

பொதுமக்களை நேரடியாக நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும் வகையில் கிராமிய அரசாங்ம் எனும் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கயந்த கருணாதிலக

கிராமிய அரசாங்க எண்ணக் கொள்கைப்பத்திர வரைபும் மற்றும் அலுவல் தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற குழுக்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதற்காகவேண்டி பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் இந்த விடயங்களை பிரசுரிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments