கப்பல் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டவர் கைது

0
61

கப்பல் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டவர் கைது. வவுனியாவில் பல இளைஞர்களிடம் கொழும்பிலுள்ள துறைமுகத்தில் வேலை வாங்கித்தருவதாக தெரிவித்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவவந்தவரை வவுனியா போலீசார் கைது செய்துள்ளனர்.கப்பல் துறையில் வேலை

பூவரசங்குளத்தைச் சேர்ந்த விஸ்வதீபன் என்பவரிடம் கொழும்புத் துறைமுகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 16 லட்சம் ரூபாவை பெற்று மோசடியில் ஈடுபட்ட 29 வயதுடைய சிவநேசராஜா வினோத்குமார் என்பவரை வவுனியா போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் அதன் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com