கனரக வாகனமொன்று வீதியில், தாழிறங்கியுள்ளதால் டயகம பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது

0
40

கனரக வாகனமொன்றுகனரக வாகனமொன்று வீதியில், தாழிறங்கியுள்ளதால் தலவாக்கலை-டயகம பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட நாகசேனை 3ஆம் கட்டை பகுதியில் இன்று காலை 8 மணியளவில், குறித்த வாகனம் தாழிறங்கியுள்ளது. அந்த வாகனத்தில், 28 ஆயிரம் மெற்றிக்டொன் புல் இருந்துள்ளது.
போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் வாகன சாரதிகள் தேயிலை ஆராய்ச்சி நிலைய பாதை அல்லது நானுஓயா மெரேயா பாதையில் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

வாகனத்திலுள்ள புல் இறக்கப்படுவதாகவும் வாகனத்தை அப்புறப்படுத்திய பின் மீண்டும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments