ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம்    “ கத்திசண்டை “

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது….

கம்ரஷியல் மற்றும் காமெடி கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். விஷால் – வடிவேலு, சூரி மூவரது காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். நிச்சயம் இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும்.படத்தின் இசையமைப்பாளர்  ஹிப்ஹாப் தமிழா எழுதி பாடிய , விஷால் – தமன்னா நடிப்பில் உருவான பாடலான  “ நான் கொஞ்சம் கருப்புதான் அனாலும் நெருப்புதான் “   பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் இம்மாதம் 23 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் சுராஜ்.

 

Comments

comments