கத்தார் உடனான உறவை முறித்த 4 வளைகுடா நாடுகள்

0
162
கத்தார்

கத்தார் துபாய் : கத்தார் உடனான தூதரக ரீதியிலான உறவுகள் அனைத்தையும் முறித்துக் கொள்ள பக்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகிய 4 நாடுகள் முடிவு செய்துள்ளன.

கத்தாரில் உள்ள அனைத்து தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெறுவதாகவும் இந்நாடுகள் அறிவித்துள்ளன. கத்தார் நாடு, பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, ஊக்குவித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன. அடுத்த 48 மணி நேரத்திற்குள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள உள்ளதாக 4 நாடுகளும் அறிவித்துள்ளன.

மேலும் கத்தார் உடனான விமான மற்றும் கடல்வழி போக்குவரத்தையும் படிப்படியாக நிறுத்த உள்ளதாக இந்நாடுகள் அறிவித்துள்ளனர். கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு மக்களும் உடனடியாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய ஏற்றுமதி
கத்தாருக்கு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்வது, மிஷின்கள் மற்றும் உபகரணங்கள், இரும்பு, பிளாஸ்டிக், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள், ரசாயனங்கள், ரப்பன், மசாலா பொருட்கள், மற்றும் பருப்பு வகைகளாகும். கத்தாருக்கு நெருக்கடி அதிகரித்திருப்பது இந்தியாவுடனான வர்த்தக உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
கடந்த 10 நாட்களுக்கு முதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவுதிஅரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டபோது, முஸ்லீம் நாடுகள் தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென அறிவித்திருந்த நிலையில், தற்போது காட்டருடனான தொடர்பை மத்திய கிழக்கின் முக்கியமான நான்கு நாடுகள் துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com