கண் லென்சுகள் வழங்குவதில் பாரிய சிக்கல்…

0
18

இலவச கண் லென்சுகள் வழங்கும் வேலைத்திட்டத்தை சில வைத்தியர்கள் குழப்புவதற்கு முயல்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜிதவின் தலைமையில், நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியர்கள் இருப்பில் கண் லென்ஸ்கள் இல்லை என்று கூறுவதாகவும், குறித்த வைத்தியர்களுக்கு மருந்து நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் இலாபங்கள், அவர்களுக்குக்கு கிடைக்காமையின் காரணமாகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

48 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டதைப் போன்று ஏனைய மருந்துகளின் விலைகளும் குறைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments