கட்சியின் ஐக்கியத்திற்காக 66ஆவது மாநாட்டுக்கு அனைவருக்கும் அழைப்பு

0
37

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளுக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டிற்கு சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments