கச்சதீவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

0
57

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

அதன்போது, அவர் இதனை தெரிவித்ததுடன் தொடர்ந்து கூறுகையில், “கச்சத்தீவில் இம்முறை இலங்கையில் இருந்து 6,500 யாத்திரிகர்களும், இந்தியாவில் இருந்து 2,500 யாத்திரிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவுக்கான ஒழுங்குகளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர்.பக்கர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசல கூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியில் இருந்து நண்பகல் 1 மணிவரை நடைபெறும். அதே போன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5.00 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும்.

சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளன. அத்துடன், பயணிகள் பாதுகாப்பு அங்கி அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 200 பொலிஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும்.

ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரிகள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com